dinamalar telegram
Advertisement

இல்லம் தேடி கல்வி திட்டம்;தன்னார்வலர்களுக்கு பயிற்சி

Share
விழுப்புரம்-விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி நடந்தது.மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, தன்னார்வலர்கள் மூலம் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் மாணவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.இதில், தெரிவு செய்யப்பட்ட 64 தன்னார்வலர்களுக்கு முதல் கட்டமாக, விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 2 நாட்கள் பயிற்சி நடந்தது.பயிற்சியில், இல்லம் தேடிக் கல்வி திட்ட சிறப்பு அலுவலர் இளம்பகவத், திட்டம், நோக்கம், மாணவர்களை கையாளும் முறை சார்ந்த விபரங்களை, தன்னார்வலர்களுக்கு விளக்கினார்.பின், தன்னார்வலர்களுக்கான கையேடு, கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.இதையடுத்து, சி.இ.ஓ., கிருஷ்ணப்பிரியா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் தனவேல், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் சேவியர் சந்திரகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.கருத்தாளர்களாக மாநில அளவில் பயிற்சி பெற்ற இளங்கோவன், அருள், மாலினிதேவி, மாரி, ேஹமலதா, பாலமுருகன் செயல்பட்டனர்.ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் செய்திருந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement