dinamalar telegram
Advertisement

விதிமுறை மீறிய வாகனங்களுக்கு அபராதம்... ரூ.28 லட்சம்; மோட்டார் வாகன அதிகாரிகள் நடவடிக்கை

Share
Tamil News
விழுப்புரம்-விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் விதிமுறைகள் மீறிய வாகனங்களுக்கு 28 லட்சத்து 1,490 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார் தாலுகா பகுதிகளில், வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் தீவிர வாகன தணிக்கை செய்தனர்.அதில், ஓவர் லோடு, அதிக பயணிகளை ஏற்றிச் செல்லுதல், மிகுந்த ஒலி எழுப்பும் காற்றொலிப்பான் (ஹாரன்) பயன்படுத்துதல். காப்பீடு, தகுதி, அனுமதிச் சான்று இல்லாமல் வாகனங்களை ஓட்டுதல் என விதிமுறைகள் மீறிச் சென்ற சரக்கு, ஆட்டோ ரிக்ஷா, ஆம்னி பஸ், மேக்சிகேப் என 207 வாகனங்கள் கண்டறியப்பட்டது.இந்த வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டதோடு, 18 லட்சத்து 42 ஆயிரத்து 490 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.அது மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்குள் உரிய ஆவணங்கள் இன்றியும், விதிமுறை மீறி அதிக பயணிகளை ஏற்றி வந்தது என 100 வாகனங்கள் கண்டறியப்பட்டு, 9 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 28 லட்சத்து 1,490 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று காலத்தை யொட்டி, வாகனங்களின் ஆவணங்களை புதுப்பிக்கவும், எப்.சி., பர்மிட், ஓட்டுநர் உரிமம் ஆவணங்களின்றி வாகனங்களை ஓட்டிக் கொள்வதற்கும், மத்திய அரசு கடந்த அக்டோபர் 30ம் தேதி வரை காலக்கெடு விதித்திருந்தது.

இந்த காலகெடு முடிந்தும், உரிய ஆவணங்களின்றி ஓட்டிய வாகனங்கள் மீது அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.மோட்டார் வாகன விதிமுறைகளை மீறி இயங்கும் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கும் பணி தொடரும் என வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.விரைவில் பள்ளி வாகனங்கள் ஆய்வுவிழுப்புரம் மாவட்டத்தில், கொரோனா தொற்று குறைந்துள்ளதையொட்டி, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, பள்ளி வாகனங்களின் பராமரிப்பு நிலைகளை ஆய்வு செய்யும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இந்த வாகனங்கள் எப்.சி., செல்வதற்காக கால அவகாசத்தை ஒதுக்கியுள்ள வட்டார போக்குவரத்து அதிகாரிகள், விரைவில் கலெக்டர் முன்னிலையில் பள்ளி வாகனங்களின் பராமரிப்பு நிலைகளை ஆய்வு செய்யவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement