dinamalar telegram
Advertisement

மழைநீர் வெளியேற்றும் பணி

Share
விழுப்புரம்-விழுப்புரம் நகராட்சிக்குட்பட் ட பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணியை, கலெக்டர் ஆய்வு செய்தார்.விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட மகாராஜபுரம், தேவநாதசுவாமி நகர், கணேஷ் நகர், ரோஜா நகர் உள்பட பல பகுதிகளில், கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் உடனடியாக நீரை அகற்ற வேண்டும்.அப்பகுதியில் தற்காலிகமாக சாலை அமைத்திட வேண்டும். மேலும், நோய் தொற்று ஏற்படாத வகையில் அவ்வப்போது, நகராட்சி பணியாளர்கள் மூலம் குப்பைகளை அப்புறப்படுத்தி பிளீச்சிங் பவுடர் துாவி துாய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.வருங்காலங்களில் மழைநீர் தேங்காத வகையில், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.நகராட்சி கமிஷனர், சுரேந்திரஷா, தாசில்தார் அனந்தகிருஷ்ணன் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement