dinamalar telegram
Advertisement

மயிலம் ரோட்டில் பன்றிகள் தொற்று நோய் பரவும் அபாயம்

Share
திண்டிவனம்-திண்டிவனம் - மயிலம் ரோட்டில், பன்றிகள் சுற்றித் திரிவதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திண்டிவனம் - மயிலம் ரோடு முக்கிய சாலையாக உள்ளது. இப்பகுதியில் டவுன் போலீஸ் நிலையம், திருமண நிலையம், தனியார் மோட்டார் விற்பனை நிலையங்கள், லாரி சர்வீஸ் சென்டர், ஓட்டல்கள் உள்ளன.இதுமட்டுமின்றி, ஏராளமான வாகனங்களும் இவ்வழியாக கடந்து செல்கின்றன. இந்த சாலையில் தற்போது, பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால், அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, சாலைகளில் திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement