dinamalar telegram
Advertisement

விவசாயிகளுக்கு அஞ்சலி 

Share
புதுச்சேரி-வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இறந்தவர்களுக்கு, முன்னாள் முதல்வர் நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார்.மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு, உயிர்நீத்த விவசாயிகளுக்கு மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அஜந்தா சிக்னல் அருகே நடந்தது.ராஜ்பவன் தொகுதி மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். வட்டார காங்., தலைவர்கள் ராஜ் மோகன், ஜெரால்டு முன்னிலை வகித்தனர்.முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில காங்., தலைவர் ஏ.வி.சுப்ர மணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், வக்கீல் மருதுபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு விவசாய சட்ட மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி உயிர் தியாகம் செய்த 700 விவசாயிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி தீபஒளி அஞ்சலி செலுத்தினர்.ராஜ்பவன் தொகுதி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement