dinamalar telegram
Advertisement

தக்காளி ரூ.70க்கு விற்பனை

Share
புதுச்சேரி-புதுச்சேரியில் நேற்று தக்காளி 70 ரூபாய்க்கு விற்பனையானது.புதுச்சேரியில் கன மழை காரணமாக காய்கறி விலை கடுமையாக உயர்ந்தது. நேற்று முன்தினம் புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் தக்காளி கிலோ 110 ரூபாய்க்கு விற்றது.மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்த நிலையில் வெளி மாநிலங்களிலிருந்து லாரிகள் மூலம் காய்கறிகளின் வரத்து அதிகரித்தது. இதனால் தக்காளியின் விலை 40 ரூபாய் வரை குறைந்து நேற்று கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது.அதே போல் 80 ரூபாய்க்கு விற்ற கேரட், பீன்ஸ் 70க்கும், 100க்கு விற்ற கத்தரி 70க்கும், 40க்கு விற்ற உருளை நேற்று 30 ரூபாய்க்கும் விற்றது.வியாபாரி ஒருவர் கூறுகையில், கன மழை காரணமாக காய்கறி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்தது. தற்போது காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளதால், விலை சற்று குறைந்துள்ளது' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement