dinamalar telegram
Advertisement

மாயமான நிறைமாத கர்ப்பிணி உறவினர்களிடம் ஒப்படைப்பு

Share
புதுச்சேரி-உழவர்கரையில் மாயமான 9 மாத கர்ப்பிணி பெண்ணை போலீசார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.மூலக்குளம் ஜே.ஜே.நகர், 7வது குறுக்கு தெரு வைச் சேர்ந்தவர் ராஜ் குமார். இவரது மனைவி சவிதா, 36; ஒன்பது மாத கர்ப்பிணி. கடந்த 21ம் தேதி இவருக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.கடந்த 20ம் தேதி இரவு கோவிலுக்கு சென்ற சவிதா வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரது தாய் ஜோதி அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.அதில் கிடைத்த தகவலின்பேரில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இருந்த சவிதாவை மீட்டு, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், மனநிலை சரியில்லாததால் பஸ் ஏறி விழுப்புரம் சென்றதாகும், அங்கு பஸ் நிலையத்தி லேயே தங்கி இருந்ததும், அங்கிருந்தவர்கள் அவரிடம் விசாரித்து பஸ் ஏற்றி புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தது தெரிய வந்தது.அதனைத் தொடர்ந்து போலீசார், சவிதா அவரது உறவினர்களை வரவழைத்து ஒப்படைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement