dinamalar telegram
Advertisement

அகண்ட குபேர காயத்ரி பாராயணம் ஏராளமான பெண்கள் பங்கேற்பு

Share
புதுச்சேரி-உலக ஆர்ய வைசிய மகா சபாவின் புதுச்சேரி மகிளா சங்கம் சார்பில் நடந்த அகண்ட குபேர காயத்ரி பாராயணம் நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.புதுச்சேரி காமாட்சியம்மன் கோவில் - மகாத்மா காந்தி சந்திப்பில் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில் குபேர யந்திரம் உள்ளது.இங்கு கார்த்திகை மாதம் குபேரனின் ஜென்ம நட்சத்திரமான 'பூசம்' நட்சத்திரத்தை யொட்டி அகண்ட குபேர காயத்ரி பாராயணம் உலக ஆர்ய வைசிய மகா சபாவின் புதுச்சேரி மகிளா சங்கம் சார்பில் நேற்று நடந்தது.காலை 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகத்துடன், குபேர காயத்ரி பாராயணம் ஆரம்பமானது. பாராயணத்தில், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர்.மதியம் 12.00 மணிக்கு - உச்சிகால பூஜை, மாலை 6.00 மணிக்கு - மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை உலக ஆர்ய வைசிய மகாசபாவின் புதுச்சேரி மகிளா சங்க தலைவி பத்மலட்சுமி, செயலாளர் கலாவதி குப்தா, பொருளாளர் பத்மபிரியா, மாவட்ட தலைவி பாக்கியலட்சுமி, மாவட்ட துணை தலைவி கீதா லட்சுமி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement