dinamalar telegram
Advertisement

ஆயுர்வேத ஊட்டச்சத்து விழா

Share
புதுச்சேரி-புதுச்சேரி ஆம்பூர் சாலையில் உள்ள அரசு ஓமியோபதி மருத்துவமனையில், தேசிய ஆயுர்வேத தினத்தையொட்டி, ஆயுர்வேத ஊட்டச்சத்து விழா நடந்தது.விழாவில், ஆயுர்வேதத்தின் முக்கியத்துவம் குறித்து ஆயுர்வேத திட்ட அதிகாரி பத்மாவர்த்தம்மா பேசினார். ஆயுர்வேதத்தில் ஊட்டச்சத்து குறித்து சீனியர் டாக்டர் தமிழரசன், டாக்டர் அமிதா டேனியல் பேசினர்.முதியவர் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு ஊட்டச்சத்து குறித்து டாக்டர் திவ்யா கவியரசன் விளக்கம் அளித்தார். டெங்கு மற்றும் கொரோனா நோய்களை தடுக்கும் வகையில் ஆயுர்வேத கஷாயம் வழங்கப்பட்டது.உலர்ந்த மூலிகைகள் கண்காட்சி, ஆரோக்கிய உணவு போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement