dinamalar telegram
Advertisement

பல்கலை., துணைவேந்தருக்கு அதிகாரிகள், ஊழியர்கள் நன்றி

Share
புதுச்சேரி-கோரிக்கைகளை நிறைவேற்றிய புதுச்சேரி பல்கலைக் கழக துணைவேந்தருக்கு அதிகாரிகள், ஊழி யர்கள் நன்றி தெரிவித்தனர்.புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் 66 பேருக்கு அண்மையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டுள்ளது.மாற்றியமைக்கப்பட்ட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 60 அதிகாரிகளுக்கு உயர்த்தப்பட்ட ஊதிய விகிதம், குரூப் பி அதிகாரிகள் 13 பேருக்கு குரூப் ஏ அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 70 ஒப்பந்த ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்பட்டனர்.குரூப் பி மற்றும் குரூப் சி அலுவலர்கள், ஊழியர் கள் 33 பேருக்கு பரிந்துரை குழு கூட்ட முடிவின் அடிப் படையில் பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது.நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றிய பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கை, பேராசிரியர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement