dinamalar telegram
Advertisement

ஜோர்: தீபாவளி பரிசு வழங்குவதற்கான பணிகள்...குடிமைப்பொருள் வழங்கல் துறை தீவிரம்

Share
Tamil News
புதுச்சேரி-தீபாவளி பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட இலவச அரிசி மற்றும் சர்க்கரை வழங்குவதற்கான இறுதிகட்ட பணிகளில் குடிமை பொருள் வழங்கல் துறை முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையொட்டி, மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி கடந்த அக்டோபர் மாதம் அறிவித்தார்.அதன்பேரில், குடிமைப் பொருள் வழங்கல் துறை, தீபாவளி பரிசுக்கான அரிசி மற்றும் சர்க்கரை கொள்முதல் செய்வதற்காக பாப்ஸ்கோ நிறுவனம் மூலம் டெண்டர் கோரியது. இருப்பினும் தீபாவளிக்கு குறுகிய நாட்களே இருந்தாதால் பரிசு பொருட்கள் வழங்கப்படவில்லை

.தீபாவளி முடிந்த பின், டெண்டர் பிரித்து இறுதி செய்ததை தொடர்ந்து இலவச அரிசி மற்றும் சர்க்கரையை மக்களுக்கு ரேஷன் கடை மூலம் வழங் குவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஓரிரு தினங்களில் தீபாவளி பரிசு வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைக்க உள்ளார்.மாநிலத்தில் மொத்தமுள்ள 3.65 லட்சம் ரேஷன் கார்டுகளில் மாகி நீங்கலாக மீதமுள்ள 3.57 லட்சம் கார்டுகளுக்கு மட்டும் தீபாவளி பரிசு வழங்கப்பட உள்ளது. மாகியில் ஓணம் பண்டிகை பிரதானமாக கொண்டாடப்படுவதால், இலவச பரிசு வழங்கப்படவில்லை.எனவே புதுச்சேரிக்கு 2,626 டன் அரிசி, காரைக்காலுக்கு 609 டன், ஏனாமிற்கு 165 டன் அரிசி வழங்க கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சர்க்கரை புதுச்சேரிக்கு 523 டன், காரைக்காலுக்கு 128 டன், ஏனாமிற்கு 33 டன் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், குடிமை பொருள் வழங்கல் துறைக்கு மொத்தம் ரூ.13.73 கோடி செலவாகும்.ஐந்து ஆண்டுகள்புதுச்சேரி கூட்டுறவுத் துறையின் கீழ் 317, பாப்ஸ்கோ 35, தனியார் 25 என, மொத்தம் 377 ரேஷன் கடைகள் இயங்கி வந்தன. இவற்றின் மூலம், ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி, தீபாவளி மற்றும் பொங்கல் பரிசுகள், பேரிடர் கால நிவாரணங்கள் வழங்கப்பட்டு வந்தது.கடந்த ஆட்சியில் கவர் னர் மற்றும் ஆட்சியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இலவச அரிசிக்கு பதில் பணம், பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது

.இதனால், ரேஷன் கடைகள் கடந்த 2016ம் ஆண்டு மூடப்பட்டன. தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு அரசுஅறிவித்த தீபாவளி பரிசான 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை ரேஷன் கடை மூலம் வழங்கப்பட உள்ளது. அதனையொட்டி, ரேஷன் கடைகளை சுத்தப் படுத்தி தயார் படுத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகின்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement