dinamalar telegram
Advertisement

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மகாராஷ்டிரா வங்கி கடனுதவி

Share
புதுச்சேரி-மகாராஷ்டிரா வங்கி சார்பில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான மகாராஷ்டிரா வங்கி தமிழகம், புதுச்சேரியில் தனது சேவை நடவடிக்கைகளை வாடிக்கையாளர்களுக்கு விரிவுபடுத்தி வருகிறது. அத்துடன் மகாராஷ்டிரா வங்கியின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் நேரடி சிறப்பு முகாமினை நடத்தி வருகிறது.இந்த சிறப்பு முகாம் புதுச்சேரி செண்பகா ஓட்டலில் நேற்று நடந்தது. வங்கியின் செயல் இயக்குனர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் அன்பழகன் வாழ்த்தி பேசினார். சென்னை மண்டல மேலாளர் ராஜேஷ்குமார் வரவேற்றார். மகாராஷ்டிரா வங்கி முதன்மை மேலாளர் சேரகுல யோகேஷ் பாபு திட்டங்கள் குறித்து விவரித்தார்.வங்கியின் செயல் இயக்குனர் விஜயகுமார் பேசுகையில், 'நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கினை வகிப்பதுடன் வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க பங்கினை வழங்கி வருகின்றன.இந்நிறுவனங்கள் சொந்தகாலில் நிற்பதற்கான அனைத்து உதவிகளையும் மகாராஷ்டிரா வங்கி சிறந்த முறையில் செய்து வருகிறது' என்றார்.தொடர்ந்து முகாமில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மத்திய அரசின் திட்டங்கள், மகாராஷ்டிரா வங்கியின் நேரடி திட்டங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.விழாவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன உரிமையாளர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement