dinamalar telegram
Advertisement

தலைமைச் செயலரை முற்றுகையிட்ட விவகாரம் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களிடம் விளக்கம் கேட்க முடிவு

Share
புதுச்சேரி-தலைமைச் செயலரை முற்றுகையிட்ட ஆளும் கூட்டணி கட்சியான பா.ஜ., எம்.எல்.ஏ., க்களிடம் விளக்கம் கேட்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.புதுச்சேரியில் வெள்ள பாதிப்பு குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து மதிப்பை குறைத்து மத்திய அரசிற்கு அனுப்பியுள்ளதாக 10 எம்.எல். ஏ.,க்கள் நேற்று முன்தினம் தலைமை செயலரை முற்றுகையிட்டு சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.இதில் என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., ஆறுமுகம், ரமேஷ், லட்சுமிகாந்தன், பாஸ்கரன், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன், சுயோச்சை எம்.எல்.ஏ.,க்கள் நேரு, பிரகாஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.இது பற்றி எம்.எல். ஏ.,க்கள் கூறுகையில், 'எங்கள் கோரிக்கை களை நிறைவேற்றாவிட்டால் தலைமை செயலகம், கவர்னர் மாளிகை, தேவைப்பட்டால் பாரா ளுமன்றம் முன் உண்ணா விரதம் இருப்போம்' என்றனர்.தலைமை செயலரை முற்றுகையிட்டது, எம்.எல்.ஏ.,க்கள் பேட்டி அளித்தது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.மத்தியில் பா.ஜ., ஆட்சியும், மாநிலத்தில் கூட்டணி கட்சி ஆட்சி நடக்கும் போது காங்., மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களுடன் பா.ஜ., எம்.எல்.ஏ.,கள் முற்றுகையில் பங்கேற்றது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் குறித்து புதுச்சேரி மாநில பா.ஜ., கட்சி, மேலிடத்திற்கு புகார் செய்துள்ளது. இச்சம்பவம் குறித்து எம்.எல்.ஏ.,க்களிடம் விளக்கம் கேட்க மேலிடம் முடிவு செய்துள்ளது.இது குறித்து பா.ஜ., மாநிலத் தலைவர் சாமிநாதனிடம் கேட்டபோது, 'முற்றுகை சம்பவம் குறித்து எம்.எல்.ஏ.,க்களிடம் விளக்கம் கேட்கஉள்ளோம்' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement