dinamalar telegram
Advertisement

ஆணையரிடம் கோரிக்கை மனு 

Share
புதுச்சேரி-மணவெளி தொகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை உடனடியாக வெளியேற்ற அ.தி.மு.க., தொகுதி செயலாளர் பாஸ்கரன், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சா யத்து ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தார்.மனுவில் கூறியிருப்பதாவது:மணவெளி தொகுதியில் பல இடங்களில் மழைநீர் தேங்கி கழிவுநீராக மாறி வருகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளதால், அதனை உடனடியாக மோட்டார் மூலம் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மேலும், தொகுதியில் சேதமடைந்துள்ள சாலைகள் மற்றும் தெரு மின் விளக்குகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதை தடுக்க, தொகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement