dinamalar telegram
Advertisement

டாடி ஆறுமுகம விசாரணை இன்று ஒத்திவைப்பு

Share
புதுச்சேரி-'டாடி ஆறுமுகம்' மகன் உள்ளிட்ட மூவரின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.'வில்லேஜ் புட் பேக்டரி' என்ற 'யு டியூப் சேனல்' நடத்தி வருபவர் 'டாடி ஆறுமுகம்'. இவர், புதுச்சேரியில் 'டாடி ஆறுமுகம் பிரியாணி' என்ற உணவகம் நடத்தி வருகிறார். இவரது மகன் கோபிநாத், 33; உள்ளிட்ட ஐந்து பேர், கடந்த 21ம் தேதி இரவு, ஏ.கே.டார்வின் ஓட்டலுக்கு சென்றனர். அங்குள்ள பாரில் மது குடித்த பின், பாரை அடித்து நொறுக்கியதில், ஊழியர் ஜார்ஜஸ் சினாஸ், 32, என்பவருக்கு காயம் ஏற்பட்டது.புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார், கோபிநாத் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிந்து, இருவரை கடந்த 22ம் தேதி கைது செய்தனர். தலைமறைவான கோபிநாத் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.இந்நிலையில், மூவரும் முன்ஜாமின் கேட்டு புதுச்சேரி கோர்ட்டில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று மாஜிஸ்திரேட் (2) பிரித்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜார்ஜஸ் சினாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தாக்குதலில் காயமடைந்தவரின் மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க அவகாசம் கோரினார். அதனையேற்ற மாஜிஸ்திரேட், மனு மீதான விசாரணையை இன்று 26ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement