வடலூர் அருகே பெண் வி.ஏ.ஒ., தற்கொலை
வடலுார்-வடலுார் ஆபத்தானபுரத்தில் மன அழுத்தம் காரணமாக பெண் வி.ஏ.ஒ., துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கடலுார் மாவட்டம் வடலுார் ஆபத்தானபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகள் ஜெயஸ்ரீ 35; வடலுார் அருகே உள்ள சேப்ளாநத்தம் கிராமத்தில் வி.ஏ.ஒ., வாக பணி புரிந்தார். சேலம் மாவட்டம் காமலாபுரம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும், ஜெயஸ்ரீக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஹர்ஷா 5; என்ற மகள் உள்ளார். ஜெயஸ்ரீ ஆபத்தானபுரத்தில் தந்தை ராஜேந்திரன் வீட்டில் தங்கி பணி புரிந்தார். கடந்த ஆண்டு 8 மாத கர்ப்பிணியாக இருந்த ஜெயஸ்ரீக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கர்ப்பம் கலைந்துள்ளது.அவர் பணி புரிந்த கிராமத்திற்கு அதே ஊரை சேர்ந்த வி.ஏ.ஒ., ஒருவர் மாறுதலாகி வர முயன்றார். மன அழுத்தத்தில் இருந்த ஜெயஸ்ரீ, இரண்டு மாதமாக மருத்துவ விடுமுறையில் இருந்தார். நேற்று காலை தந்தை ராஜேந்திரன் அறையில் மின் விசிறியில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை ராஜேந்திரன் கொடுத்த புகாரில், பேரில் வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!