dinamalar telegram
Advertisement

மொபைல் போன் திருடியவர் கைது

Share
திருவெண்ணெய்நல்லுார்-திருவெண்ணெய்நல்லுார் அருகே வீடு புகுந்து மொபைல் போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசெவலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 47; இவர், தனது வீட்டில் மொபைல் போனில் சார்ஜ் போட்டுவிட்டு துாங்கினார்.நேற்று அதிகாலை 4:00 மணியளவில் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது, மொபைல் போனை திருடிக் கொண்டு ஒருவர் ஓடினார். ராமச்சந்திரன் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.விசாரணையில், டி.குன்னத்துார் கிராமத்தை சேர்ந்த வாசுதேவன் மகன் விக்னேஷ், 21; என தெரியவந்தது. உடன் விக்னேஷ் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement