dinamalar telegram
Advertisement

கடலுாரில் பரவும் டெங்கு

Share
கடலுார்-கடலுார் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் நேற்று 9 பேர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.வடகிழக்கு பருவ மழை துவங்கி, மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ள நிலையில் கடலுார் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 மாதங்களில் 80 க்கும் மேற்பட்டோர் பாதித்துள்ளனர். டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கடமைக்கென மேற்கொள்வதால் பரவல் அதிகரித்துள்ளது.மாவட்ட தலைநகரான கடலுாரில் 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதித்துள்ள நிலையில் நேற்று காடாம்புலியூரை சேர்ந்த 8 வயது சிறுமி, பண்ருட்டியை சேர்ந்த 40 வயது பெண், கடலுாரை சேர்ந்த 24 வயது இளம்பெண் உட்பட 9 பேர் புதிதாக டெங்கு காய்ச்சலால் பாதித்து, கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement