dinamalar telegram
Advertisement

அமைச்சர் பொன்முடி வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை

Share
விழுப்புரம்-அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில், 2 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது.உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. இவரது மனைவி விசாலாட்சி. இருவரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2006ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. பொன்முடி, விசாலாட்சி ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. ஆஜராகாததற்கான காரணம் குறித்து அவர்களது வழக்கறிஞர் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து, இவ்வழக்கில் அரசு தரப்பில் சேர்க்கப்பட்டிருந்த 2 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது.மேலும், மற்ற சாட்சிகளிடம் விசாணை நடத்துவதற்காக, வழக்கு விசாரணையை இன்று 26ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement