dinamalar telegram
Advertisement

சேதியூர் தொடக்கப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

Share
புவனகிரி-ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவியை பாலியல் சீண்டல் செய்த ஆசிரியரை, அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், கீரப்பாளையம் ஒன்றியம், சேதியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பூந்தோட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார், 55, ஆசிரியராக பணிபுரிகிறார். இவர், பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவியை பாலியல் சீண்டல் செய்துள்ளார்.மாணவியின் பெற்றோர், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப் பதிந்து, ஆசிரியர் அசோக்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement