dinamalar telegram
Advertisement

சிறப்பு டி.ஜி.பி., மீதான வழக்கு 1ம் தேதி குறுக்கு விசாரணை

Share
விழுப்புரம்-முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் வழக்கில், குறுக்கு விசாரணைக்காக பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி, வரும் 1ம் தேதி நேரில் ஆஜராக விழுப்புரம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி புகார் அளித்தார். இதையடுத்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட டி.ஜி.பி., மீதும், பெண் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., மீதும், விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிந்தனர்.இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் சாட்சிகள் விசாரணை கடந்த 11ம் தேதி முதல் துவங்கியது. முதல் சாட்சியான புகார்தாரர் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி சாட்சியம் அளித்துள்ள நிலையில், மற்ற சாட்சிகளின் விசாரணை நடக்கிறது.நேற்று நடந்த வழக்கு விசாரணைக்கு, சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி., ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜராகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.இதையடுத்து, சாட்சிகள் விசாரணை நடந்தது. இந்த வழக்கில், சம்பவத்தன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியின் வாகன டிரைவராக பணியில் இருந்த, தற்போது பெரம்பலுார் மாவட்டம், பாடலுார் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பாலமுருகன் 4வது சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். 5வது சாட்சியாக பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு வழி பாதுகாவலராக சென்ற, தற்போது பெரம்பலுார் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரியும் சந்திரசேகரன் சேர்க்கப்பட்டிருந்தார்.இவர்கள் இருவரும் நேற்று விழுப்புரம் கோர்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். பாலமுருகன் காலை 10:30 மணிக்கு சாட்சியம் அளிக்கத் துவங்கி, மதியம் 12:00 மணி வரை சாட்சியம் அளித்து முடித்தார். தொடர்ந்து, சந்திரசேகரன் சாட்சியம் அளித்தார். இவருடைய சாட்சியம் மதியம் 1:30 மணிக்கு முடிந்தது. இருவரும் அளித்த சாட்சியங்களை, நீதிபதி கோபிநாதன் பதிவு செய்து கொண்டார்.மேலும், வரும் 1ம் தேதி பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி விழுப்புரம் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும். அன்று அவரிடம் சிறப்பு டி.ஜி.பி., தரப்பினர் குறுக்கு விசாரணை செய்யலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement