dinamalar telegram
Advertisement

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும்படி பா.ஜ., இன்று மாட்டு வண்டி போராட்டம்

Share
சென்னை : பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும்படி, தமிழக அரசை வலியுறுத்தி, பா.ஜ., விவசாய அணி சார்பில், இன்று(நவ.,26) அனைத்து மாவட்டங்களிலும் மாட்டு வண்டி பயண போராட்டம் நடக்கிறது.

மத்திய அரசு, இம்மாதம் 3ம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்ததை அடுத்து, அடுத்த நாளான தீபாவளியன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைந்தது. அதை பின்பற்றி, பல மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்ததால், அம்மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு, 17 ரூபாய் வரை குறைந்துள்ளது.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மாநில அரசை வலியுறுத்தி, தொடர் போராட்டம் நடத்துமாறு கட்சியினருக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அக்கட்சியின் இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில், 22ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

விவசாய அணி சார்பில், இன்று மாநிலம் முழுதும் மாட்டு வண்டிப் பயண போராட்டம் நடக்கிறது. நாளை சிறுபான்மையினர், வழக்கறிஞர் பிரிவுகள் சார்பிலும்; அதற்கு அடுத்த நாள் எஸ்.சி., - எஸ்.டி., அணி சார்பிலும் போராட்டங்கள் நடக்க உள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (34)

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  .. 2014 வாக்கில் கச்சா எண்ணெய் விலைகள் கடும் சரிவை சந்திப்பதற்கு முன்பு வரை மத்திய அரசுக்கு எரிபொருள்கள் மேல் பெரிதாக வரி வருமானம் இருந்ததில்லை.. மாநில அரசுகள் தங்களின் வரிகளை தத்தமது பகுதிக்கேற்ப வரி / ஆக்ட்ராய் மாதிரி போட்டு சம்பாதித்தன.. அதனால் தான் ஆதிகாலத்தில் இருந்து பெட்ரோல் விலைகள் தத்தமது அண்டை மாநிலங்களைவிட டில்லி, பாண்டி, கோவா, தமன் போன்ற இடங்களில் குறைவாக இருந்தன... மும்பையில் அதிகமாக இருந்தன(இத்தனைக்கும் என்னை துறப்பணம் மற்றும் சுத்திகரிப்பு அங்கே பெருமளவுக்கு உண்டு) .. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியை .. அதன் பலனை மக்களுக்கு சேர விடாமல் கலால் வரியை உயர்த்தி மத்திய அரசு லாபம் பார்க்க ஆரம்பிச்சதும்தான் உண்மையான தாக்குதல் மக்களின் மேல் விழ ஆரம்பிச்சது... மத்திய அரசின் வரி விதிப்பிற்கு பின்னர் மாநில அரசின் வரி வருவதால் அவர்களும் கலெக்சன் அதிகமாவுதுன்னு கம்மென இருப்பதும் தேர்தல் வந்தால் மாநில வரியை சற்றே குறைச்சும் ஜாலியா இருந்தாங்க... மாநிலங்களும் பாமரமக்கள் கடந்த சில வருடங்களாக கொள்ளையடிக்கப்படுவதில் பலனடைந்தாங்க அப்பிடிங்கறது உண்மைதான்... ஆனால் காலங்காலமா அவர்களுக்கு கிடைக்கும் 20 முதல் 25 ஒரு லிட்டருக்கான அளவு வரிதான் இப்போ கிடைக்குது.. இதை விட்டு கொடுத்தாலோ அல்லது வரியை குறைத்தாலோ அவர்களின் வரி வருவாய் கடுமையா பாதிக்கும் அபாயம் இருக்கு... உடனே மற்ற மாநிலங்கள் குறிப்பா BHIMAARU மாநிலங்கள் குறைக்கலையான்னு கேட்கலாம் .. அவர்களின் எரிபொருள் உபயோக நுகர்வு நம் தமிழ்நாட்டை விட அதிகம்... அதனால் சமாளிக்க முடியும்.. அதனால் 2014 வாக்கில் கிட்டத்தட்ட ஒன்னியும் இல்லாம இருந்து இப்போது இன்னமும் 25 ரூபாய் வரி போடும் மத்திய வரிகளில் தான் அதிக குறைப்புகள் செய்ய முடியும்..

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அது கறை, கட்சியில்ல

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஏழு வருசத்துல ரெண்டேகால் மடங்கு, அதாவ்து 225 பர்செண்ட்டு ஒசத்தின மானெங்கெட்டவனுங்க

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  இந்த மாட்டுவண்டி போராட்டத்தை டில்லியில் நடத்தி னால் நல்லது. பிஜேபி க்கு திருப்புமுனையாக அமையும். இங்கு இதனால் ஒரு பயனும் இல்லை.

 • balakrishnan - Mangaf,குவைத்

  பிஜேபி தமிழ்நாட்டின் நல்ல எதிர்கட்சியாக செயல் படுகிறது.

  • Suri - Chennai,இந்தியா

   கெக்கே பிக்கே பிக்கே கேகே

Advertisement