dinamalar telegram
Advertisement

இது உங்கள் இடம்: முதல்வரின் இன்னொரு முகம்!

Share

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:பா.விஜய், காட்டிகன், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தின் சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படும் நீலகிரியில், விதிமீறல் கட்டடங்கள் அதிகமாகிப்போனதால், உச்ச நீதிமன்றமே தலையிட்டு சில சட்ட விதிமுறைகளை அறிவித்தது. அதை, மாவட்ட ஆட்சியர் மூலம் நிறைவேற்றவும் ஆணையிட்டது.

நீலகிரியின், 113வது கலெக்டராக, 2017ல் இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்ற நாளிலிருந்தே, தன் பணியை சிறப்பாக மேற்கொண்டார். சட்டத்திற்குப் புறம்பாக ஆழ்துளைக் கிணறு தோண்டுதல், மரம் கடத்தல் ஆகியவற்றை தடுத்தார்; -பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்தார்.-சீகூர் யானை வழித்தடத்தில் இருந்த, 39 ஓட்டல்கள் மூடல் மற்றும் மின் வேலி அமைக்கத் தடை ஆகியவற்றில் உறுதியுடன் செயல்பட்டார். அவரின் அதிரடி நடவடிக்கைகள் நன்மை பயப்பதாகவே அமைந்ததால், மக்களிடம் ஆதரவு பெருகத் துவங்கியது.

அரசியல்வாதி மற்றும் சினிமாதுறையினர், அவர்களின் உறவினர் மற்றும், 'பினாமி'கள் தான் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து, சீகூர் மற்றும் மசினகுடி பகுதிகளில், 7,000 ஏக்கரில், 821 கட்டடங்களை அனுமதியின்றி கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. சிலர், தங்கள் கட்டடங்கள் யானை வழித்தடத்தில் இல்லை என கூறுமாறு, கலெக்டருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்; அதற்கு அவர் செவி சாய்க்கவில்லை என்பதால், மிரட்டலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தகவல்கள் பரவுகின்றன.

இந்நிலையில் தமிழக அரசு, 'நிர்வாக ரீதியில் அவசர மாற்றம் செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றமும், நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டது. யானை வழித்தடத்தில், விதிமீறி கட்டியுள்ள கட்டடங்களை அகற்றுவதில் இன்னசென்ட் திவ்யா தீவிரமாக செயல்பட்ட நிலையில், அவரை இடமாற்றம் செய்ய, தி.மு.க., அரசு அவசரம் காட்டுவது ஏன்?

நல்ல அதிகாரிகளை, தேடித் தேடி பணியமர்த்தும் முதல்வர் ஸ்டாலின், நீலகிரி விஷயத்தில் தன் இன்னொரு முகத்தை காட்டுகிறாரா? உண்மையிலேயே நல்லாட்சி தர, முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார் என்றால், நீலகிரி கலெக்டர் விஷயத்தில் நேர்மையான, நல்ல முடிவு எடுப்பார் என, நம்புகிறோம். மாறாக, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவான முடிவு எடுக்க துணை போனார் என்றால், அதற்கான எதிர்வினையை, அவர் மட்டுமின்றி தமிழகமும் அனுபவிக்கும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (82)

 • Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ

  நல்லவனாலும் அதை இந்த திருடர்கள்தான் சொல்லனுமாம்.

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  ஒன்னும் ஒன்னும் ரெண்டு...புரிஞ்சவன் புத்திசாலி ..புரியாதவன் தி..க

 • Truth Triumph - Coimbatore,இந்தியா

  திமுக எம் பீ , எம் எல் எ க்கள் கோ பேக் பண்ணுங்க ...காடு நாடு வீடு எல்லாம் நல்ல இருக்கும்..... திமுக எம் பீ , எம் எல் எ க்கள் எல்லாரும் கோ பேக் பண்ணுங்க சீக்கிரம் ....

 • Soumya - Trichy,இந்தியா

  எப்பிடி இரிக்கும்

 • abibabegum - madurai- Anna nagar,இந்தியா

  நல்ல அதிகாரிகளை, தேடித் தேடி பணியமர்த்தும் முதல்வர் ஸ்டாலின், நீலகிரி விஷயத்தில் தன் இன்னொரு முகத்தை காட்டுகிறாரா? உண்மையிலேயே நல்லாட்சி தர, முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார் என்றால், நீலகிரி கலெக்டர் விஷயத்தில் நேர்மையான, நல்ல முடிவு எடுப்பார் இன்னுமா என்னை நம்பிட்டு இருக்கீங்க

Advertisement