dinamalar telegram
Advertisement

இன்று (நவ. 26) மும்பை தாக்குதல் 13 ம் ஆண்டு நினைவு தினம் :

Share
மும்பை: மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் 13ம் ஆண்டு நினைவு தினம் இன்று (நவ.26) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மும்பையில் பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

2008 நவ., 26ம் தேதி பாகிஸ்தானில் இருந்து படகில் வந்த 10 பயங்கரவாதிகள் தனித்தனி குழுவாக சென்று, இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன், தாஜ் ஓட்டல், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை, ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், லியோபோல்டு கபே ஆகிய இடங்களில் தங்களது பயங்கரவாத செயல்களை அரங்கேற்றினர்.


பயங்கரவாதிகளுக்கும், இந்திய பாதுகாப்பு படையினருக்கும் இடையே 2 நாட்கள் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் பலரை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்ததால், அவர்களை உயிருடன் மீட்க நமது வீரர்கள் போராட வேண்டியிருந்தது. இதில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் ஹேமந்த் கர்கரே, ராணுவ உயர் அதிகாரி சந்தீப் உன்னிகிருஷ்ணன், மும்பை கூடுதல் போலீஸ் கமிஷனர் அசோக் காம்தே ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். முடிவில் 10 பயங்கரவாதிகளில் ஒருவனை தவிர, 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலியாகினர். 300 பேர் காயமடைந்தனர்.


பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்ட ஒரே பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு, உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, 2012 நவ., 21ல் துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தாக்குதல் நடந்ததன் 13-ம் ஆண்டையொட்டி மும்பை சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன் மற்றும் தாக்குதல் நடந்த இடம் உள்பட பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். பயணிகளின் உடமைகளை கடும் சோதனைக்குட்படுத்திய பின்னரே அனுமதித்தனர். தவிர பாதுகாப்பு படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

 • sundaram sadagopan - Bengaluru,இந்தியா

  எல்லையோர காவல் படையின் kankaanippu இல்லாதலால் 10 பாகிஸ்தான் theeviravaadhigal சுலபமாக மும்பை நகரை ooduruvi makkalai naaigal pola suttuthallinar. Idhil vuyar போலீஸ் அதிகாரிகளும் adakkam .Idhil en.es.jee thuraiyai சேர்ந்த வீரர்கள் பல தீவிரவாதிகளை suttukondranar அதில் நமது வீரர் மேஜர் unnikrishnan veera maranam அடைந்தார் . Anaal indha thaakkudhalil தியாகம் செய்த மற்றொரு வீரர் மும்பை chowpatti போலீஸ் yettu amble avargal. Avar vuyirai panayam vaithu ajmal kasaabai kattipidithu அவனை செயலிசக்க seidhu uyirodu pidikka udhavinaar. anaal avan குண்டு பாய்ந்து உயிரை vittaar. மேஜர் unnikrishnanukku bengaluru yelahankaavil ஒரு ரோட்டுக்கு அவர் பெயர் idapattulladhu. Indrum மும்பை v.டீ railway ஸ்டேஷனில் இரும்பு தூண்களில் thuppaakki sootin adayaalangalai paarkalam . Indha sambavathin adayaalamaaga ஒரு நினைவுச்சின்னம் வைப்பது nalladhu. Seivaargalaa ?

 • Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா

  பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கொலைகார செயல் மிகக் கொடுமை. அதைவிடக் கொடுமை, இது ஹிந்து தீவிரவாதிகளின் சதி என்று திசை திருப்ப காங்கிரஸ் முயற்சித்தது. இரண்டையும் மக்கள் மறக்க மாட்டார்கள்.

 • Suppan - Mumbai,இந்தியா

  மனிஷ் திவாரி தன்னுடைய புத்தகத்தில் மும்பை தாக்குதலின் பொழுது காங்கிரஸ் அரசின் கையாலாகாத்தனத்தை விளாசியிருக்கிறார். எந்தவிதமான எதிர் நடவடிக்கையும் எடுக்காமல் தாஜா அரசியல் செய்து கொண்டிருந்தது மன்மோகன் அரசு. ராகுல் ப்ரியங்கா வாய்மூடி மௌனம். சோனியாவோ கேட்க வேண்டாம். வெட்கக்கேடு.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  குண்டு வைத்து அப்பாவிகளை கொன்ற 10 பயங்கரவாதிகள் அமைதி மார்க்கத்தினர் ..... இந்தசம்பவத்தில் நாட்டுக்காக உயிர் நீத்த தியாகிகள் இந்துக்கள்..... இந்த அடிப்படை உண்மையை மறைக்கவும் கூடாது... மறக்கவும் கூடாது... ஆனால் பயங்கரவாதிகளுக்கு மதம் இல்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பவர்கள் அந்த பத்து பேரை விட ஆபத்தானவர்கள் ......

Advertisement