dinamalar telegram
Advertisement

நகர் புற உள்ளாட்சி தேர்தலில் புதிய தமிழகம் தனித்து போட்டி : டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

Share
கோவை:''நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதிய தமிழகம் தனித்து போட்டியிடும்,'' என இக்கட்சியின் தலைவர்டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
கோவையில் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழாவையொட்டி டிச.15 முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஒரு பகுதியாக 'உலக இந்துக்கள் ஒருங்கிணைப்பு மாநாடு' நடக்கிறது. இது சிறுபான்மையினருக்கு எதிரானதல்ல.
விரைவில், அறிவிக்கப்படவுள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், புதிய தமிழகம் தனித்து போட்டியிடும். யாருடனும் கூட்டணி குறித்து பேசவில்லை.நான் தேசியத்தின் ஒரு முனையில் இருக்கிறேன். திராவிடம் வேறு முனையில் உள்ளது.
2026ல் கூட்டணி ஆட்சி அமையும். அதனடிப்படையில் பணியாற்றி வருகிறோம்.தமிழகத்தில் ஆறு மாத தி.மு.க.. ஆட்சிக்கு வெறும் புகைப்படங்களே சாட்சியாகும். அரசின் விளம்பர துறை சிறப்பாக செயல்படுகிறது. இவ்வாறு, டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement