dinamalar telegram
Advertisement

5 ஜி அலைவரிசையால் கொரோனா உயர்நீதிமன்றம் தள்ளுபடி

Share
மதுரை:5 ஜி அலைபேசி டவர்களால் கொரோனா பரவுவதாகவும், தடுக்க கொள்கை முடிவு எடுக்க அரசுக்கு உத்தரவிடக்கோரியும் தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
நாகர்கோவில் ராஜசேகர் தாக்கல் செய்த பொதுநல மனு: நான் மென்பொருள் பொறியாளர். எம்.இ.,கம்ப்யூட்டர் அறிவியல் படித்துள்ளேன். இயற்பியலில் ஆராய்ச்சி மேற்கொள்கிறேன். 2 ஜி, 3 ஜி, 4 ஜி மற்றும் 5 ஜி அலைக்கற்றைகள் சுற்றுச்சூழலில் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. 5 ஜி அலைபேசி டவர் அலைவரிசை மூலம் கொரோனா பரவுகிறது.

5 ஜி இல்லாத ஆப்பிரிக்க நாடுகளில் துவக்கத்தில் கொரோனா பாதிப்பு இல்லை. 5 ஜி அலைபேசி டவர்கள் மூலம் கொரோனா வைரஸ் எதிர்காலத்தில் பரவுவதைத் தடுக்க, அரசு கொள்கை வகுக்க வேண்டும். அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ராஜசேகர் மனு செய்தார்.
நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு: அறிவியலில் நீதிமன்றத்திற்கு போதிய நிபுணத்துவம் இல்லை. இதில் இந்நீதிமன்றம் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்தது. மனுதாரர் வாபஸ் பெற்றார். நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement