dinamalar telegram
Advertisement

மதுரையில் கியூ பிரிவு போலீசார் தேடுதல்

Share
மதுரை:தேனி மாவட்டம் பண்ணைப்புரம் கார்த்திக். 5 ஆண்டுகளுக்கு முன் மாயமானார். தாயார் புகாரில் போலீசார் தேடி வந்த நிலையில், அவருக்கு நக்சைலட் அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிந்தது.

அவரது பின்னணி குறித்து கியூ பிரிவு போலீசார் விசாரித்து வந்த நிலையில் அவர் மதுரையில் நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் தங்கியிருக்கலாம் எனத் தகவல் கிடைத்தது. நேற்று கோமதிபுரம், கூடல்புதுார், உசிலம்பட்டி, திருமங்கலம் உட்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் தேடினர். சில ஆவணங்கள் கைப்பற்றினர். கார்த்திக் எங்கு உள்ளார் என்ற மர்மம் நீடிக்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement