dinamalar telegram
Advertisement

ஊரு விட்டு ஊரு சென்று இல்லம் தேடி போக சொல்லாதீங்க தவிப்பில் தன்னார்வலர்; அதிருப்தியில் ஆசிரியர்கள்

Share
மதுரை:இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு அவர்கள் வசிப்பிடத்தில்இருந்து தொலைதுார மையங்களில்பணி வழங்குவதால் சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் திட்டநோக்கம் கேள்விக்குறியாகியுள்ளது.
மாநில அளவில் முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. பதிவு செய்துள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின்சான்றிதழ்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று தலைமையாசிரியர்கள் சரிபார்த்து வருகின்றனர்.எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு மணிநேரத்தில் அவர்களை பயிற்சியில் பங்கேற்க உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இது கல்வி அதிகாரிகளின் உச்சகட்ட அவசர போக்கை காட்டுகிறது என கல்வியாளர்கள் விமர்சிக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது: இத்திட்டத்தில் தன்னார்வலர் மட்டுமே பயன்படுத்தப்படுவர். பணி நேரம் மாலை 5:00 - இரவு 7:00 மணி என்பதால் சம்பந்தப்பட்ட கற்பித்தல் மையம் அமைவிடம் சார்ந்த தன்னார்வலரே அங்கு நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. தற்போது சொந்த பகுதியில் இருந்து தொலைதுார மையங்களுக்கு நியமிக்கப்படுகின்றனர். பிற பகுதி தன்னார்வலரை நம்பி பெண் குழந்தைகளை இரவு 7:00 மணி வரைபெற்றோர் அனுமதிப்பார்களாஎன தெரியவில்லை.ரூ.ஆயிரம் மட்டுமே மதிப்பூதியம் பெறுவோர் தொலைதுார மையங்களுக்கு பஸ்ஸில் செல்ல நேர்ந்தால் டிக்கெட் செலவுக்கு அது போதாது. அலைச்சல் தான் மிஞ்சும். அந்தந்த பகுதி தன்னார்வலரை மையங்களுக்கு நியமிக்க வேண்டும், என்றனர்.

ஒரு மணிநேரத்தால் அவதி



இணையவழி எழுத்து தேர்வு அடிப்படையில் நேற்று காலை 8:30 மணிக்கு தேர்ச்சி பெற்ற தன்னார்வலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காலை 9:30 மணிக்கே பயிற்சியில் பங்கேற்க வட்டார கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டனர். ஒரு மணிநேரம் மட்டுமே அவகாசம் தந்ததால் பலர் பங்கேற்க முடியவில்லை.

தன்னார்வலராக பதிவு செய்யாத பகுதிகளுக்கு அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் நேரில் சென்று படித்த இளைஞர்களை 'கேன்வாஸ்' செய்து பதிவு செய்யும் பணிக்கு அனுப்பி வைப்பதால் ஆசிரியர்களும் அதிருப்தியில் உள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement