dinamalar telegram
Advertisement

கோவை ஆசிரியருக்கு 2 நாள் கஸ்டடி

Share
கோவை:கோவையில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி அளித்தது.

கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி, இரு வாரங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். பாலியல் துன்புறுத்தல் காரணமாக, அவர் தற்கொலை செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, 35, கைது செய்யப்பட்டார்.அவரை ஐந்து நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் மனு செய்தனர். விசாரித்த நீதிபதி குலசேகரன், இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்து நேற்று உத்தரவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement