dinamalar telegram
Advertisement

ரூ.10 கோடி நிலம் மீட்க அறநிலைய துறை தீவிரம்

Share
Tamil News
திருப்பூர்:திருப்பூரில், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து, வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய முயற்சி நடக்கிறது. நிலத்தை மீட்க அறநிலைய துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
திருப்பூர் - காங்கேயம் ரோடு, நாச்சிபாளையத்தில், சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் உள்ளது. சர்வே எண்:105ல் 2.47 ஏக்கர் உள்ளது. இந்த இடம், இனாம் ஒழிப்பு சட்டத்தின்படி தனியாருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதை வைத்து, அவர் பத்திரம் தயார் செய்து விற்று விட்டார்.

தற்போது அந்நிலத்தை, வீட்டு மனைகளாக பிரித்து, விற்பனை செய்வதற்காக சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போதயை மார்க்கெட் மதிப்பில், நிலம் 10 கோடி ரூபாய் மதிப்புடையது. கோவில் நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கு, பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

'தனியார் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும். கோவில் நிலத்தை வேறு பயன்பாட்டிற்கு அனுமதிக்கக் கூடாது' என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஹிந்து சமய அறநிலைய துறை அலுவலர்கள் கூறுகையில், 'இந்த நிலம், 1912ல் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

1968ல், இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் தனியாருக்குப் பட்டா வழங்கப்பட்டது. தற்போது, நிலத்தை பதிவு செய்யக்கூடாது என்று பதிவுத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement