dinamalar telegram
Advertisement

கோடநாடு கொலை வழக்கு ஜாமினில் வந்தார் மனோஜ்

Share
Tamil News
குன்னுார்:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இரண்டாவது நபராக குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, வாளையார் மனோஜுக்கு கடந்த ஆகஸ்டில், ஊட்டி மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கியும், ஜாமின் உத்தரவாதம் அளிக்க யாரும் முன்வரவில்லை.நீண்ட இழுபறிக்கு பின் கடந்த 23ம் தேதி, பிணையதாரர்கள் நீதிமன்றத்திற்கு வந்தனர்.

இதை ஏற்று, 'மனோஜ், ஊட்டியை விட்டு வேறு எங்கும் செல்லக் கூடாது. திங்கள்கிழமை தோறும், ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும்' என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி, நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.இதையடுத்து, குன்னுார் கிளைச் சிறையில் இருந்து வாளையார் மனோஜ் நேற்று விடுவிக்கப்பட்டார்.

மேலாளரிடம் விசாரணை



கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, அதில் தொடர்புடைய டிரைவர் கனகராஜ் மரணம் ஆகியவை குறித்து, நீலகிரி மாவட்ட தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், தொடர்புடையவர்கள் என பலரையும் கோவை பி.ஆர்.எஸ்., வளாகத்துக்கு அழைத்து, விசாரிக்கின்றனர். கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

எஸ்டேட்டில் கொலை நடந்த நாளில், மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது, 'சிசிடிவி' கேமரா இணைப்புகள் துண்டிக்கப்பட்டது குறித்து, அவரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது.தற்போது கிடைத்துள்ள புதிய தகவல்கள் அடிப்படையில், இரண்டாம் முறையாக நடராஜனிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement