dinamalar telegram
Advertisement

பெங்களூரு ரெகுலர் பேனர் செய்தி...

Share
பெங்களூரு:''பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில், மூன்று நாட்கள் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையால் ஏற்படும் பாதிப்புகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்யும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெங்களூரு மாநகராட்சிக்கு, எத்தகைய சூழலையும் சமாளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். மழை பாதிப்பை கண்காணிக்க, உயர் அதிகாரிகள் குழுவை முதல்வர் நியமித்துள்ளார்,'' என வருவாய் துறை அமைச்சர் அசோக் தெரிவித்தார்.

7 லட்சம் ஏக்கர் நாசம்



கர்நாடகாவில் நவம்பர் முழுதும் தொடர்ந்து மழை பெய்து பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் 7 லட்சம் ஏக்கர் விவசாய பயிர்கள் நாசமாகின. மொத்தம் 25 பேர் இறந்தனர். மழை பாதிப்பு குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், முதல்வர் பசவராஜ் பொம்மையை தொடர்பு கொண்டு, மத்திய அரசு சார்பில் முழு ஒத்துழைப்பு தருவதாக நம்பிக்கை தெரிவித்தனர்.

இதற்கிடையில், வெள்ள பாதிப்பை சந்தித்த விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்குவது குறித்து, நிதித் துறை உயர் அதிகாரிகளுடன், முதல்வர் பசவராஜ் பொம்மை, பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.பின் அவர் கூறுகையில், ''மழையால் கேழ்வரகு, நெல், நிலக்கடலை, பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. 'சர்வே' நடத்தி, உடனடியாக விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கப்படும். இது குறித்து, நிதி துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
இந்நிலையில், வங்கக் கடலில் தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், கர்நாடகாவின் பல பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து, வருவாய் துறை அமைச்சர் அசோக், விதான் சவுதாவில் நேற்று கூறியதாவது:வானிலை ஆய்வு மைய தகவல்படி, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இன்று, நாளை, நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்கள் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அறிக்கை



பெங்களூரு, சிக்கபல்லாபூர், கோலார், மாண்டியா, சாம்ராஜ் நகர், மைசூரு, ஹாசன், குடகு, உடுப்பி வரையிலும் கன மழை பெய்யும். எனவே, மூன்று நாட்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மழையால் ஏற்படும் பாதிப்புகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்யும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெங்களூரு மாநகராட்சிக்கு, எத்தகைய சூழலையும் சமாளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்.மழை பாதிப்பை கண்காணிக்க, உயர் அதிகாரிகள் குழுவை முதல்வர் நியமித்துள்ளார். நானும் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்.

பயிர்கள் பாதிப்பு குறித்து, வரும் 30ம் தேதிக்குள் அறிக்கை தரும்படி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவாரண நிதி வழங்கும் போது, அறுவடை செய்த விளைச்சல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement