dinamalar telegram
Advertisement

ரூ.10 லட்சம் கையாடல் சாணார்பட்டி ஏட்டு சஸ்பெண்ட்

Share
சாணார்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் அரசு பணம் ரூ.10 லட்சத்தை கையாடல் செய்த போலீஸ் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
சாணார்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எழுத்தராக பணிபுரிந்தவர் ஏட்டு கர்ணன். இந்த ஸ்டேஷனில் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டியவர்களிடம் அபராதமாக வசூலித்த தொகை இருந்தது. அதில் ரூ.10 லட்சத்து 46 ஆயிரத்தை கையாடல் செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அடிக்கடி பணிக்கு வராமல் இருந்துள்ளார். இதையடுத்து அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இந்தப்பணம் அங்கு பணியாற்றிய 9 சப்-இன்ஸ்பெக்டர்கள், 229 வழக்குகளில் வசூலித்த அபராத தொகையாகும். ஏட்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement