dinamalar telegram
Advertisement

மனைவி கொலையில் வியாபாரிக்கு ஆயுள் தேனி நீதிமன்றம் தீர்ப்பு

Share
தேனி:போடியில் மனைவியை சந்தேகப்பட்டு அரிவாளால் வெட்டி கொலை செய்த தென்றல்நகர் ஜவுளிவியாபாரி வீரக்குமாருக்கு 38, தேனி மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
வீரக்குமாரின் மனைவி லட்சுமி 35. தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்தார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவியை சந்தேகப்பட்ட வீரக்குமார் வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறினார். இதற்கு அவர் மறுத்தார். இதனால் 2014 மே 6ல், போடி மீனாட்சி தியேட்டர் அருகில் லட்சுமியை அரிவாளால் வெட்டி வீரக்குமார் கொலை செய்தார். போடி டவுன் போலீசார் அவரை கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. தீர்ப்பளித்த நீதிபதி வெங்கடேசன், கொலை செய்த குற்றத்திற்காக வீரக்குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், கட்டத் தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை விதித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜராஜேஸ்வரி ஆஜரானார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement