dinamalar telegram
Advertisement

சிவகங்கையில் கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு

Share
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில்தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாகமழை பெய்து வருகிறது. ஏற்கனவே பெய்த மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. நேற்று காலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. நகர்ப்புற பகுதிகளில் மழை நீர் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகனங்களில் பயணம் செய்பவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.


சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மையான நீர் நிலைகளில் கரைகள் பலமிழந்துள்ளதால் வெள்ளப் பெருக்கு காரணமாக உடையும் நிலையில் உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் வயல்களில் தண்ணீர் தேங்கி வடியாத நிலை உள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement