dinamalar telegram
Advertisement

கொரோனா தடுப்பூசி போட்ட நரிக்குறவர்கள்

Share
திருப்புத்துார் : திருப்புத்தூர் இந்திரா நகர் நரிக்குறவர் குடியிருப்பில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் கலெக்டர் அறிவுரையால் தடுப்பூசி போட தயங்கிய 26 பேர் தடுப்பூசி போட்டனர். இக்குடியிருப்பில் டாக்டர் செந்தில்குமார், சுகாதார மேற்பார்வையாளர் சகாய ஜெரால்ட் ராஜ் உள்ளிடடோர் தடுப்பூசி முகாம் நடத்தினர். கலெக்டர் மதுசூதன் ரெட்டி முகாமை பார்வையிட்டார். அப்போது சிலர் தடுப்பூசி போட முன்வரவில்லை. கலெக்டர் தடுப்பூசியின் அவசியம் குறித்து விளக்கம் அளித்தார். இதை அடுத்து நரிக்குறவர்கள் தாமாக முன்வந்து ஊசி செலுத்தி கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement