dinamalar telegram
Advertisement

கொடைக்கானலில் ஹெலிபேடு: நிபுணர் குழு ஆய்வு

Share
Tamil News
கொடைக்கானல்:கொடைக்கானலில் இந்திய வான்வழிப் போக்குவரத்து துறை தொழில்நுட்ப வல்லுனர் குழு ஹெலிகாப்டர் இறங்குதளம் அமையவுள்ள இடத்தினை ஆய்வு செய்தனர்
.கொடைக்கானலில் அரசு ஹெலி டூரிசம் ஏற்படுத்தப்படும் என அறிவித்தது. இதற்காக கொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் வருவாய்த்துறை இடத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்க ஆய்வுகள் நடந்து வருகின்றன.இதையடுத்து அந்த இடத்தை நேற்று இந்திய வான் வழித் துறை தொழில் நுட்ப குழுவினர் கேப்டன் ஆர்.கே.சிங், மார்கன், ஞான்பிரகாஷ் குழுவினர் ஆய்வு செய்தனர்.

வருவாய்த் துறையின் நில வரைபடம், இறங்கு தளத்தின் அமைப்பு, மலை பாங்கு, சீதோஷ்ண நிலை, கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆலோசித்தனர்.வல்லுனர் குழுவினர் கூறியதாவது: கொடைக்கானலில் இறங்கு தளம் அமைக்க சாத்தியக் கூறுகள் நன்றாக உள்ளது. இங்கு நடுத்தர ரக ஹெலிகாப்டர்கள் இறங்கலாம்.

இதற்கென 2 ஏக்கர் நிலம் உள்ளது. அரசுக்கு 20 நாளில் ஆய்வு குறித்து அறிக்கை அளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.சுற்றுலா அலுவலர் சிவராஜ், தாசில்தார் முத்துராமன், உதவி சுற்றுலா அலுவலர் ஆனந்தன், வி.ஏ.ஓ. சுசீந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement