dinamalar telegram
Advertisement

அரசு பஸ்களில் மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு; மானாமதுரையில் தொடரும் அவலம்

Share
மானாமதுரை : மானாமதுரை பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி மாணவிகளை ஏற்ற மறுக்கும் அரசு டவுன் பஸ்களால் மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுற்று வட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த 1600 மாணவிகள் படிக்கின்றனர். பள்ளிக்கு கிராம பகுதியிலிருந்து பல பஸ்களில் மானாமதுரைக்கு வர வேண்டும். தமிழக அரசு மகளிர், மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம் என பெருமை தேடிக்கொள்கிறது. ஆனால், உண்மையிலேயே மானாமதுரை பள்ளி மாணவிகளை கண்டாலே பஸ்களை நிறுத்தாமல் அரசு பஸ் டிரைவர்கள் அடாவடியாக செல்வது வாடிக்கையாகி விட்டது.

குறிப்பாக மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டில் பள்ளி நேரங்களில் மாணவர்களை ஏற்றாமல் செல்கின்றனர். அப்படியே டிரைவர், கண்டக்டர்களிடம் போராடி பஸ்சில் ஏறினாலும், அவர்களை பள்ளி அருகே நிறுத்தி இறக்கிவிடாமல் மாற்று ஸ்டாப்பில் நிறுத்தி அவதிக்கு உள்ளாக்குகின்றனர். பஸ்களில் ஏற்ற மறுப்பதால் நடந்தே பள்ளிக்கு வரும் மாணவிகள் உரிய நேரத்திற்குள் வரமுடியாமல் சிரமம் அடைகின்றனர்.

அரசு பஸ் ஓட்டும் கண்டக்டர், டிரைவர்கள் தங்கள் குழந்தைகளை போல தான், மாணவிகளும் என எண்ணி பஸ்களில் அவர்களை அனுமதிக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement