dinamalar telegram
Advertisement

வைகை நீர் திறப்பு அதிகரிப்பு 

Share
ஆண்டிபட்டி:வைகை அணைக்கான நீர் வரத்து அதிகரிப்பால், அணையில் இருந்து நேற்று மாலை நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நேற்று மதியம் பெய்த மழையால் வைகை அணைக்கான நீர் வரத்து உயர்ந்தது. நேற்று காலை நீர் மட்டம் 69.49 அடியாக இருந்தது. அணை மொத்த உயரம் 71 அடி. அணைக்கான நீர் வரத்து நேற்று காலை வினாடிக்கு 3379 கன அடியாகவும், நீர் திறப்பு வினாடிக்கு 2900 கன அடியாகவும் இருந்தது.

மதியம் பெய்த மழையால் நேற்று மாலை நீர் வரத்து அதிகரித்து வினாடிக்கு 4757 கன அடியாக உயர்ந்தது. அணைக்கு வந்த நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. ஆற்றின் வழியாக வினாடிக்கு 3938 கன அடி, கால்வாய் வழியாக வினாடிக்கு 600 கன அடி, மதுரை, ஆண்டிபட்டி - சேடபட்டி குடிநீருக்கு வினாடிக்கு 69 கன அடி, 58 ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கன அடி நீர் வீதம் வெளியேறியது. நேற்று மாலை அணை நீர் மட்டம் 69.59 அடியாக இருந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement