dinamalar telegram
Advertisement

மணமக்களுக்கு தக்காளி பரிசு

Share
கோவை: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களுக்கு இரண்டு தட்டுகளில் தக்காளி பரிசாக வழங்கப்பட்டது.தமிழகத்தில் பருவமழை தீவிரத்தால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால், தக்காளி விலை கிலோவுக்கு, 140 முதல், 150 ரூபாய் வரை விற்கப்பட்டது. இந்த விலை தற்போது, 80 ரூபாயாக குறைந்துள்ளது.இச்சூழலில், கோவைகுறிச்சி பிரிவு பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மணமகன், விஜய் மக்கள் இயக்கத்தில் நிர்வாகியாக இருப்பதால், திருமண வரவேற்புக்கு வந்திருந்த அவரது நண்பர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மணமக்களுக்கு தலா இரண்டு கிலோ அளவிலான தக்காளிகளை தட்டில் வைத்து அன்பளிப்பாக வழங்கினர்.இப்போதைய, நிலையில் தக்காளி தான் மிகவும் 'காஸ்ட்லியான கிப்ட்' என்பதை உணர்த்தும் வகையில் மணமக்களுக்கு பரிசளித்து வெளிப்படுத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement