dinamalar telegram
Advertisement

வைகையில் நீருக்கு அணைபோடும் கருவேலமரங்கள்

Share
மானாமதுரை : மானாமதுரை பகுதி வைகை ஆற்றில் வளர்ந்திருக்கும் கருவேலமரங்களால் நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மானாமதுரை வைகை ஆற்றில் தற்போது கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து காணப்படுகிறது. மானாமதுரையை ஒட்டியுள்ள கிராமப்பகுதி கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து செல்லும் கால்வாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு விவசாய பணிகள் நடைபெறுவது வழக்கம்.தற்போது வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வைகையின் இருகரைகளையிலும் தண்ணீர் தவழ்ந்து செல்கின்றன.

மானாமதுரை பகுதியில் அதிகளவில் கருவேலமரங்கள் வளர்ந்து காணப்படுவதால் நீர் வரத்து தடை படுவதோடு, பாசன கால்வாய்களிலும் தண்ணீர் சரியான முறையில் செல்வதற்கு தடையாக கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் மூலம் கருவேலமரங்கள் அகற்றப்பட்டாலும் அவைகளை துாரோடு அகற்றாததால் மீண்டும் கருவேலமரங்கள் வைகை ஆற்று பகுதியில் அதிகளவில் வளர்ந்துள்ளன. தற்போது தண்ணீர் வருவதை அவை தடுத்தும் கால்வாய்களுக்கு தண்ணீர் ஒழுங்காக செல்வதிலும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement