dinamalar telegram
Advertisement

அரசின் முதலீட்டு துாதராக கோவை இளைஞர் தேர்வு

Share
Tamil News
கோவை: வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்கான அரசின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக கோவை இளைஞர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தமிழக அரசின் தொழில்துறை நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில், 'வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை, தமிழகத்தில் முதலீடு செய்ய வைப்பதற்கு, முதலீட்டு துாதர்கள் என்ற பெயரில் ஆலோசனைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை அமைச்சர், இக்குழுவின் தலைவராகவும், 'கெய்டன்ஸ்' அமைப்பின் நிர்வாக இயக்குநர், ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவர்' என, கூறப்பட்டுள்ளது. மேலும், திட்டக்குழு துணைத்தலைவர், தொழில்துறை செயலர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த நான்கு தமிழ் தொழில் முனைவோர் உட்பட 10 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், கோவை வடவள்ளியைச் சேர்ந்த இளஞ்செழியன் என்ற 27 வயது இளைஞரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இந்த இளைஞர், 'கற்கை' என்ற பெயரில், பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ்க்குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தரும் 'ஆன்லைன்' வகுப்புகளையும், தமிழகத்தில் விளையும் வாசனைத் திரவியங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஏற்றுமதி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement