dinamalar telegram
Advertisement

கால்நடை டாக்டர் காலியிடம் நிரப்பவும்; விவசாய சங்கம் வலியுறுத்தல்

Share
சிவகங்கை : மாவட்டத்தில் காணை நோயால் பாதிக்கப்படும் பசு, காளைகளை காப்பாற்ற போர்கால அடிப்படையில் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க மாவட்டசெயலாளர் ஆர்எம்., முருகன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது,மாவட்டத்தில் 2.07 லட்சம் பசு, காளை உள்ளிட்ட கால்நடைகள் வசிக்கின்றன. இவற்றிற்கு சிகிச்சை அளிக்க 87 இடங்களில் கால்நடை மருந்தகங்கள் உள்ளன. இதில் 16 மருந்தகங்களில் மட்டுமே டாக்டர், உதவியாளர்கள் உள்ளனர். கடந்த ஆட்சியில் தொகுப்பூதியத்தில் இருந்த உதவி டாக்டர்களை நீக்கிவிட்டனர். இதனால் மாவட்ட அளவில் 16 டாக்டர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது பெய்து வரும் பருவ மழைக்கு பசு, காளை உள்ளிட்ட கால்நடைகளுக்கு காணை நோய் பரவி வருகிறது. 50 க்கும் மேற்பட்ட பசு, காளைகள் இறந்துள்ளன. எனவே போர்க்கால அடிப்படையில் கால்நடைகளை காப்பாற்ற பற்றாக்குறை டாக்டர், தடுப்பூசி மருந்துகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement