dinamalar telegram
Advertisement

கோவை மேயர்அ.தி.மு.க., வேட்பாளர் யார்?

Share
- நமது நிருபர் -

கோவை மேயர் வேட்பாளராக, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட இருவருடைய பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கடந்த தேர்தலில் தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தபோதிலும், கோவை மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் அக்கட்சிக்கு தோல்வியே கிடைத்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னும், கோவை அ.தி.மு.க. , கோட்டை என்பது நிரூபணமானது. உள்ளாட்சித் தேர்தலிலும் இதே வெற்றியைக் குறி வைத்து அ.தி.மு.க.,வினர் களம் இறங்கியுள்ளனர்.முன்னாள் அமைச்சர் வேலுமணியின் தலைமையில், கோவை மாநகரிலுள்ள அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் தீவிரமாகக் களமிறங்கி பணியாற்றத் துவங்கியுள்ளனர். அ.தி.மு.க.,வினரிடம் விருப்பமனு வாங்கும் வேலையும் நேற்று துவங்கி நாளை வரை நடைபெறவுள்ளது.
இதனால் அ.தி.மு.க.,வின் கோவை மேயர் வேட்பாளர் யார் என்ற கேள்வி, எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது. நேற்று முன் தினம் சென்னையில் அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் மேயர் வேட்பாளர்களாக யாரை நிறுத்துவது என்ற விவாதமும், முக்கிய நிர்வாகிகள் மத்தியில் நடந்துள்ளது.மாநகராட்சி மேயருக்கு மறைமுகத் தேர்தல் என்ற அறிவிப்பு வெளியாகியிருப்பதால், முக்கிய நிர்வாகிகள் பலரும் இந்த தேர்தலில் நிற்க விருப்பமில்லாமல் உள்ளனர். மேயர் வேட்பாளராக நிற்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ள மற்றவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.அதில், ஆண் மேயராக இருந்தால் முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமியின் பெயரும், பெண் மேயராக இருந்தால், காளப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் செந்திலின் மனைவி கிருபாளினி பெயரும் பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement