dinamalar telegram
Advertisement

நர்ஸ் படுகொலை  போலீஸ் விசாரணை

Share
Tamil News
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை நர்ஸ், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம்,ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 44; திண்டுக்கல்லில் தங்கி கேட்டரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி, 40; ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் நர்ஸ் ஆக பணி புரிந்தார். மகன், மகள் திண்டுக்கல்லில் தந்தையுடன் உள்ள நிலையில், பாப்பம்மாள்புரத்தில் செல்வி தனியாக வசித்தார்.

நேற்று முன்தினம் சுரேஷ், மனைவி செல்வியை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது; உறவினர்களிடம் வீட்டில் பார்க்க சொல்லி உள்ளார்.பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, பூஜை அறையில் செல்வி முகம், தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. கொலையாளிகள் யார், கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement