dinamalar telegram
Advertisement

அனுமதியின்றி படப்பிடிப்பு தடுத்து நிறுத்திய போலீசார்

Share
Tamil News
பொள்ளாச்சி: அனுமதியின்றி நடந்த சினிமா படப்பிடிப்பை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில், எஸ்.ஐ., கவுதம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
மகாலிங்கபுரம் நுழைவுவாயில் அருகே, போலீஸ் என எழுதப்பட்டு, சைரன் வைத்த வாகனம் நின்றது.'போலீஸ் உயர் அதிகாரிகளின் வாகனம் எதற்காக வந்துள்ளது.' என, போலீசார் தயக்கத்துடன் நடத்திய விசாரணையில், சினிமா படப்பிடிப்பு நடப்பதாகவும், படப்பிடிப்புக்கு பயன்படுத்தும் வாகனம் என்பதும் தெரியவந்தது.இதையடுத்து, படப்பிடிப்பு குழவினரிடம் போலீசார் விசாரித்தனர். புதுமுக டைரக்டர் கார்த்திக் இயக்கி, நடிகர் அசோக் செல்வன் நடிக்கும், பெயர் சூட்டப்படாத படத்தின் படப்பிடிப்பு நடப்பது தெரிய வந்தது. படப்பிடிப்புக்கு எவ்வித அனுமதியும் பெறாததும் தெரியவந்தது.அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்த போலீசார் தடை விதித்தனர்.இதையடுத்து படப்பிடிப்பு குழுவினர் 'பேக்அப்' செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement