dinamalar telegram
Advertisement

மருத்துவர் மக்கள் முன்னேற்ற சங்க பொதுக்குழு

Share
வெள்ளகோவில்: வெள்ளகோவிலில் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.இக்கூட்டத்துக்கு, மாநில தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் தமிழரசன் மாநில பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரைப்படங்களில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் காட்சிகளை இனிவரும் காலங்களில் பயன்படுத்தக்கூடாது மீறினால், போராட்டம் நடத்தப்படும்.மருத்துவ சமூக மக்களுக்கு மூலிகை பண்ணை அமைப்பதற்கு அரசு மானிய கடன் வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்வது என்பது உட்பட, 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க ஒருங்கிணைப்பாளர் பெரியகருப்பன் பங்கேற்றனர். நகர தலைவர் முத்துக்குமார் வரவேற்றார். நகர செயலாளர் செல்வக்குமார் நன்றி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement