dinamalar telegram
Advertisement

10வது வார்டில் அடிப்படை வசதி அமைச்சரிடம் மனு அளித்த மக்கள்

Share
அவிநாசி: அவிநாசி பேரூராட்சி, 10வது வார்டில் அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டுமென, அமைச்சரிடம் மனு வழங்கப்பட்டது.அவிநாசியில் நேற்று நடந்த மக்கள் குறை கேட்கும் முகாமில், பேரூராட்சிக்கு உட்பட்ட, 10வது வார்டு மக்கள் சார்பில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனிடம் வழங்கிய மனு:காமராஜர் வீதி, நாயக்கன் தோட்டம் பகுதியில், 250 குடியிருப்புகள் உள்ளன. 30 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட இப்பகுதியில், சாக்கடை கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால், கழிவுநீர் வெளியேறாமல், துர்நாற்றம் வீசி, சுகாதார கேடு ஏற்படுகிறது. தேவையான இடத்தில் கழிவுநீர் கால்வாயுடன் மழைநீர் கால்வாய் வசதியும் எற்படுத்தி தர வேண்டும்.குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கடந்த, ஐந்து ஆண்டாக உப்பு தண்ணீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. எனவே, குடியிருப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 20 குழாய் இணைப்பு பொருத்த வேண்டும். தேவையான இடங்களில் தெருவிளக்கு கம்பம் அமைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement