dinamalar telegram
Advertisement

கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு விழிப்புணர்வு வேண்டுமென அறிவுறுத்தல்

Share
திருப்பூர்: நடப்பு மாதத்தில் தொடர்ந்து குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, 17 நாட்களுக்கு பின் சற்று அதிகரித்துள்ளது. நவ., மாத துவக்கத்தில் திருப்பூர் மாவட்டத்தின் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, 66 ஆக இருந்தது. தீபாவளி முடிந்த பின் பாதிப்பு குறைய துவங்கியது. கடந்த, 16ம் தேதி கடந்த நான்கு மாதங்களாக இல்லாத அளவாக, 50க்கும் கீழ் ஒரு நாள் பாதிப்பு, 47 ஆக குறைந்தது.மாவட்ட சுகாதார துறையினரும், பொதுமக்களும் ஆறுதல் அடைந்தனர். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்க துவங்கியுள்ளது. 57, 59 ஆக பதிவாகி வந்த பாதிப்பு நேற்று முன்தினம், 62 ஆக உயர்ந்தது.இந்த மாதத்தில், 7ம் தேதி, 62 பேருக்கு கொரோனா உறுதியானது. அதன் பின், 17 நாட்களாக தொடர்ந்து பாதிப்பு குறைந்து வந்தது; தற்போது, மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. கடந்த வாரத்தில் நான்கு பேர் தொற்றுக்கு பலியாகிய நிலையில், இந்த வாரம் மூன்று நாட்களுக்குள் ஏழு பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.சுகாதாரத்துறையினர் கூறுகையில்,'தொற்று பரவல் தடுக்க தேவையான அனைத்து விழிப்புணர்வும் மேற்கொள்ளப்படுகிறது. பலரும் முக கவசம் அணிவதை தவிர்த்து வருகின்றனர்; இவ்வாறு செய்வது தவறானது. எங்கு சென்றாலும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்,' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement