dinamalar telegram
Advertisement

நீலகிரி மாவட்டத்துக்கு புதிய கலெக்டர்

Share
சென்னை:நீலகிரி மாவட்ட கலெக்டராக அம்ரித் நியமிக்கப்பட்டுள்ளார்.நீலகிரி மாவட்ட கலெக்டராக இருந்த, இன்னசென்ட் திவ்யா, மிகவும் சிறப்பாக செயல்பட்டார்.
அந்த மாவட்டத்தில், சீகூர் பள்ளத்தாக்கு, சோலுார், மசினகுடி உள்ளிட்ட சில பகுதிகளில், யானை வழித்தடத்தில், சட்டத்திற்கு புறம்பாக தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமிக்க தடை விதித்தது. அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, 2019ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஹோட்டல் உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில், மாவட்ட கலெக்டர் விரைவாக செயல்பட வேண்டும்.
இந்த வழக்கு தொடர்பாக, அவர் பல்வேறு பணிகளை செய்து வருவதால், மறு உத்தரவு வரும்வரை, அவரை வேறு எங்கும் மாற்றக்கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. சமீபத்தில், நிர்வாக ரீதியில் அவசர மாற்றங்கள் செய்ய வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில், இடைக்கால மனு தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து, அவரை இடமாற்றம் செய்ய, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
சில தினங்களுக்கு முன், இன்னசென்ட் திவ்யா விடுப்பில் சென்றார். மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரியதர்ஷினி, கலெக்டர் பணியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.நேற்று முன்தினம் நகராட்சி நிர்வாகத்துறை இணை கமிஷனராக பணியாற்றி வந்த அம்ரித், நீலகிரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை, தலைமை செயலர் இறையன்பு பிறப்பித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement